Tuesday, February 12, 2008

ராஜ்தாக்கரேவும்,கலைஞரும் ஒன்றா? - என்ன கொடுமை சார் இது?

//மலேசிய தமிழர்களுக்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்கலாம்; நான் மராட்டியர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா என நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்//

அடி கொடுப்பவர்களும், அடி வாங்குபவர்களும் ஒன்று என்று கண்டுபிடித்து சொன்ன ராஜ்தாக்கரே இன்று முதல் "இந்தியாவின் ஒரே விஞ்ஞானி"என்று அன்போடு அழைக்கப்படுவார்.(courtesy - புலிகேசி)

மலேசியாவில் தமிழர்கள் அடிவாங்கியதற்காக கலைஞர் குரல் கொடுத்தாரேயன்றி,மலேசியர்களை அடித்துவிட்டு குரல் கொடுக்கவில்லை.

ம‌ற்ற‌ மாநில‌ம‌க்க‌ளை அடித்து துரத்தும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் கிடையாது.அவ‌ர்க‌ளுக்கு என்று ஒரு த‌னி ஏரியாவைக் கொடுத்து (ச‌வுக்கார்பேட்)அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ இருக்கிறார்க‌ளா என்று ம‌ட்டும் அவ்வ‌ப்போது பார்த்து வ‌ருவோம்.(சைட் அடிக்கிற‌துக்கு என்னா பில்ட‌ப்பு..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..அட்றா ச‌க்க‌..)

மொழிப்போராட்ட‌த்தோடு இதை போட்டுக் குழ‌ப்பிக் கொள்ளும் ஆப‌த்து இருப்ப‌தால் முன்னெச்ச‌ரிக்கையாக‌ இப்போதே சில‌ விள‌க்க‌ங்க‌ள்...

1)வ‌ட‌ நாட்டுக்கார‌ர்க‌ளின் மொழியைத்தான் வேண்டாம் என்று சொன்னோமே த‌விர‌ வ‌ட‌நாட்டு ஆட்கள் இங்கு வ‌ருவ‌தை வேண்டாம் என்று சொன்ன‌தில்லை.

2)"நான் உங்க‌ள் ஊரில் வியாபார‌ம் செய்ய‌ வேண்டும்..ஒழுங்காக‌ எங்க‌ள் மொழியைப் ப‌டியுங்க‌ள்"என்ப‌து போங்கு ஆட்ட‌ம் என்ப‌தால் தான் ஹிந்தியை வேண்டாம் என்று சொன்னோம்.

3)"ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன‌தால் தான் எங்க‌ளுக்கு என்று த‌னி ச‌ந்தை உள்ள‌து.தனித் திரைப்ப‌ட‌ங்க‌ள்,தொலைக்காட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌து.

எனவே எங்களை வைத்து ஒன்றும் காமெடி...கீமெடி பண்ணவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பின்குறிப்பு:

"என்ன‌ கொடுமை சார் இது?" என்ற‌ த‌லைப்பில் இனி அடிக்க‌டி இது போன்ற‌ சீரிய‌ஸ் விசய‌ங்க‌ள் சிரிய‌ஸாக‌ அல‌ச‌ப்ப‌டும் என்ப‌தை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

7 comments:

ஜோ/Joe said...

கலக்குங்க !

Kasi Arumugam said...

மெத்தச் சரி.

செல்வம் said...

வாங்க ஜோ....நன்றி.
................................

வாங்க..Kasi Arumugam.நன்றி

PRK said...

ஹிந்தி எதிர்ப்பு பண்ணித்தான் பல தமிழர்கள கிணற்றுத் தவளையா மாத்தியாச்சே! இனி வரவங்களாவது நல்லபடியா இருக்கட்டுமே...

Anonymous said...

)"ஹிந்தி வேண்டாம் என்று சொன்ன‌தால் தான் எங்க‌ளுக்கு என்று த‌னி ச‌ந்தை உள்ள‌து.தனித் திரைப்ப‌ட‌ங்க‌ள்,தொலைக்காட்சிக‌ள்,ப‌த்திரிக்கைக‌ள்,தொழில்நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌து.

100% unmai

செல்வம் said...

வாங்க prk ...

.//ஹிந்தி எதிர்ப்பு பண்ணித்தான் பல தமிழர்கள கிணற்றுத் தவளையா மாத்தியாச்சே! இனி வரவங்களாவது நல்லபடியா இருக்கட்டுமே...//

இப்படி ஹிந்தி எதிர்ப்பு பண்ணுணதால தான் நமக்குன்னு ஒரு கிணறாவது இருக்கு.அந்தக் கிணறு நல்ல நிலைமையிலேயும் இருக்கு.

அனைவரும் ஹிந்தி கத்துக்கொண்டிருந்தால் நாம் ஒன்றும் சொர்க்கத்திற்கு சென்றிருக்க மாட்டோம்.வடநாட்டில் உள்ள ஏதாவது ஒரு கிணற்றில் தான் இருந்திருப்போம்..:-))

செல்வம் said...

வாங்க yazh...

நன்றி..