Monday, February 11, 2008

A.R.ரஹ்மான்‍ இது நியாயமா??.. LIVE CONCERT ஒரு பார்வை

சனிக்கிழமை பக்கத்து வீட்டு பையன் ஓடோடி வந்தான்."அண்ணா என்கிட்ட live concert க்கு 2 டிக்கெட் இருக்கு.உங்க‌கிட்ட வண்டி இருக்கு.உங்க வண்டில போலாம்னு சொன்னீங்கன்னா உங்களைக் கூட்டிட்டு போறேன்" என்றான்.ஒரு நிமிடம் பொல்லாதவன் தனுஷ் போல் உணர்ந்தேன்."சண்முகம் உட்றா வண்டிய"ன்னு(நாட்டாமை) சொல்லிக்கிட்டு என் சூரப்புலியைக் கிளப்பினேன்.(தெரியாதவர்களுக்கு சூரப்புலி என்பது ஹீமேனின் வாகனம்)...(டேய் நீ வச்சிருக்கிற‌ xl super க்கு இது கொஞ்சம் ஓவர்டா என்று என் தம்பி சவுண்டு விட்டான்)

YMCA போனவுடன் முதல் நுழைவுவாயிலில் நுழைந்தோம்.பதறிப் போன security "சார்..இது VIPங்க வர்ற வழி.நீங்க 4 வது வாசல் வழியா போங்க" என்றார்.(அங்கிருந்து பார்த்த போது A.R.ரஹ்மான் ஒரு புள்ளி போலத்தான் தெரிந்தார்.:-((

MARG என்ற கட்டுமான நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாதலால் முதலில் அவர்கள் நிறுவனத்தைப் பற்றி சிறிது நேரம் பேசினார்கள்.

A.Rரஹ்மான் மேடைக்கு வந்த போது அந்த மைதானமே அதிர்ந்தது.வாணவேடிக்கைகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது.A.R.ரஹ்மான் ஹிந்தி பாடலைப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

(எனக்கு "துமாரா நாம் கியா ஹை?" தவிர வேறு எதுவும் ஹிந்தியில் தெரியாது என்பதால் தமிழ்ப் பாடல்கள் பற்றி மட்டும் இங்கே...)

ஹ‌ரிஹ‌ர‌ன்,சித்ரா,சின்ம‌யி,ஷ்ரேயாகோச‌ல்,பிளேஸ்,போன்ற‌ பாட‌க‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள்.(இன்னும் சில‌ பேர் பெய‌ர் தெரிய‌வில்லை..ஹி..ஹி..)

ஹரிஹ‌ர‌ன் ரோஜா பாட‌லில் இருந்து துவ‌ங்கினார்.வாய்ஸும்,இசையும் பொருந்தாம‌ல் ஏதோ சூப்ப‌ர் சிங்க‌ர் ஜூனிய‌ர் ஆடிஷ‌ன் ர‌வுண்டு பார்ப்ப‌து போல் இருந்த‌து.

A.R.ரஹ்மான் பாடிய‌ அத்த‌னை பாட‌ல்க‌ளும் அருமையாக‌ இருந்த‌து."அதிர‌டிக்காரன் மச்சான்..." (சிவாஜி)பாட‌ல் A.R.ரஹ்மானின் அதிர‌டி..

சித்ரா "க‌ண்ணாள‌ணே என‌து க‌ண்ணை..."(ப‌ம்பாய்)பாட‌லைப் பாடிய‌ போது ப‌ய‌ங்க‌ர‌ கிளாப்ஸ்.அவ‌ருடைய‌ குர‌லுக்கு ஒரு ஊரையே எழுதிவைக்க‌லாம்.என் பெய‌ரில் எந்த‌ ஊரும் இல்லாத‌தால் கை வ‌லிக்கும் வ‌ரை கை ம‌ட்டும் த‌ட்டினேன்.

பிளேஸ் "வாடா..வாடா(சிவாஜி) பாட‌லைப் பாடினார்.


"மதுரைக்கு போகாதடி...(ATM)பாடலை அந்த பாடகரே வந்து அசத்தலாகப் பாடினார்.

இது நியாயமா??..

1)"மதுரைக்கு போகாதடி.."பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு "தில்சேரே..." பாடலுக்கு இல்லாத போது ஏன் இவ்வளவு ஹிந்தி பாடல்கள்?

2)நீங்க‌ள் கொடுத்த‌ ஹிட் ப‌ட‌ங்க‌ள் ஏராள‌மாக‌ இருக்கும் போது ஏன் பாட‌ல் தேர்வில் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்?(சிவாஜியில் இருந்து 3 பாட‌ல்க‌ள், ATMலிருந்து 3 பாடல்கள்,குரு ஹிந்தி படத்தில் இருந்து 3 பாடல்கள்..ஏன் உங்கள் ஹிட்டுகள் மறந்து விட்டதா?இல்லை பாடகர்கள் பற்றாக்குறையா?

3)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?

4)கடைசியாக இங்கு வரும் வெளிநாடு/வெளிமாநில ஆட்களே "வண்க்கம்...நல்ல இர்க்கீங்களா?"என்று தமிழில் பேச ஆசைப்படும் போது மருந்துக்கு கூட ஒரு தமிழ் வார்த்தை இல்லை.. ஏன் ரஹ்மான்?

5)நீங்க‌ளே சொல்லுங்க‌ள் இது நியாய‌மா?

10 comments:

Santhosh said...

தல நீங்க சொன்னது ரொம்ப சரி. ரஹ்மான் ஒரே பீட்டர்ஸ் தான் அங்கன... அதே மாதிரி நிறைய ஹிந்தி பாடல்கள். இன்னும் கொஞ்சம் நல்லா செய்து இருக்கலாம். ஆனா நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்தது குறிப்பா மேடையும், அதன் பின்னால் வந்த அனிமேஷனும் பிரமாதம்.

Mayooran said...

ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி அவரிடம் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சிறில் அலெக்ஸ் said...

//)பல பாடல்களில் குரலும்,இசையும் ஒட்டவேயில்லை.லக்ஷ்மன் ஸ்ருதி இதை விட 10 மடங்கு நன்றாகப் பண்ணுவார்கள்.பயிற்சியே எடுக்கவில்லையா?//

எந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது?

சிகாகோ வந்திருக்கும்போதும் இதை உணர்ந்தேன். அவர் சுறாவழி சுற்றுப்பயணம் செய்யும்போது இசை மேடையில் இசைக்கப்படுவது குறைவாகவே. மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.
இது வருந்தத் தக்க நிகழ்வே என்றாலும்.. ஒரு கூட்டமா உக்கார்ந்து ரஹ்மான் பாடல்களை சத்தமாகக் கேட்பது வித்தியாசமாக இருந்தது.

:)

செல்வம் said...

வாங்க சந்தோஷ்,கருத்துக்கு நன்றி...

//நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்தது குறிப்பா மேடையும், அதன் பின்னால் வந்த அனிமேஷனும் பிரமாதம்.//

நீங்கள் சொல்வது மிகச்சரி.அனிமேசன் மற்றும் மேடை அமைப்பு மிகவும் நன்றாக இருந்தது.அதிலும் backdrop ஐ திரையாக உபயோகித்தது சூப்பர்

செல்வம் said...

வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்லாம் பண்ணியிருக்காரு...

செல்வம் said...

வாங்க அலெக்ஸ்..

//எந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது?//

சென்னையில் தான்.கடந்த 9 ஆம் நடந்தது.

//மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.//


மாறாக 'கரோக்கே' மாதிரி பின்னணி இசை ஓடிக்கொண்டிருக்க பாடகர்கள் மட்டும் liveஆகப் பாடுகிறார்கள்.

க‌ல்யாண‌த்துக்கு வாசிக்கிற சில ஆர்கெஸ்ட்ராகார‌ங்க‌ தான் அப்ப‌டிப் ப‌ண்ணுவாங்க‌ன்னா ர‌ஹ்மானும் அப்ப‌டியா??

Mayooran said...

//வாங்க ஜூட்...அப்படியா சொல்றீங்க?வந்தேமாதரம் எல்லாம் பண்ணியிருக்காரு...//

வந்தே மாதரத்தால் அவருக்கு பணம் கிடைத்ததோ இல்லையோ அதிக புகழ் கிடைத்தது. ரகுமானுக்கு வாழ்வு அளித்தது தமிழ் சினிமா இன்டஸ்ரிதான் ஆனால் அவர் அதிகம் விரும்புவது ஹிந்தியை ஏனோ தெரியவில்லை.

கருப்பன் (A) Sundar said...

//
ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி
//
100% உண்மையான விஷயம். நிச்சயம் ரகுமான் ஒரு சிறந்த வியாபாரிதான்

//
அவரிடம் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
//
முற்றிலும் தவறு. மக்கள் ரகுமானிடம் மொழிப்பற்றை எதிர்பார்க்கவில்லை, மாறாக தங்களுக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு பொது மொழியில் உரையாற்றவும், பாடல்களை பாடவும் கேட்டுக்கொள்கின்றனர்.

செல்வம் said...

//ரகுமானுக்கு வாழ்வு அளித்தது தமிழ் சினிமா இன்டஸ்ரிதான் ஆனால் அவர் அதிகம் விரும்புவது ஹிந்தியை ஏனோ தெரியவில்லை.//

வாங்க‌ ஜூட்.மீண்டும் ந‌ன்றி.ஹிந்தியில் வ‌ருமானம் அதிக‌ம்.எதிர்பார்ப்பு குறைவு.அதான்...

செல்வம் said...

//
ரகுமான் சிறந்த ஒரு வியாபாரி
//
100% உண்மையான விஷயம். நிச்சயம் ரகுமான் ஒரு சிறந்த வியாபாரிதான்//

வாங்க கருப்பன்..ஆனால் அவர் ஒரு மிக்ச்சிறந்த கலைஞனும் கூட..:-))

//
முற்றிலும் தவறு. மக்கள் ரகுமானிடம் மொழிப்பற்றை எதிர்பார்க்கவில்லை, மாறாக தங்களுக்கும் அவருக்கும் தெரிந்த ஒரு பொது மொழியில் உரையாற்றவும், பாடல்களை பாடவும் கேட்டுக்கொள்கின்றனர்.
//

இத..இதத் தான் எதிர்பார்க்கிறோம்.