Friday, February 15, 2008

நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!

"எல்லாவற்றையும் பகடி செய்வது சிதைந்த மனது" என்று அய்யனார் அவர்களின் பதிவில் ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.ஆம் அப்படிப் பார்த்தால் அந்த சிதைந்த மனது எனக்கும் உண்டு.

நான் கொஞ்சம் பருமனாக இருப்பேன்.(கொஞ்சம் என்பது பொய்).என்னுடைய கல்லூரிப்பருவத்தில் இதனால் நம்மை யாரும் ஓட்டுவார்களோ என்ற தாழ்வுமனப்பான்மையில் நான் எல்லோரையும் ஓட்ட ஆரம்பித்தேன் நகைச்சுவை என்ற பெயரில்.அத‌ற்கு எல்லோரும் சிரிப்பார்க‌ள்.நான் யாரை ஓட்டுகிறோனோ அவ‌ரைத்த‌விர‌.

நாள‌டைவில் எப்ப‌டி எல்லோரையும் ஓட்டுவ‌து என்று வித்தை (!)ப‌ழ‌க்க‌மான‌து.அதிலும் பெண்கள் அருகில் இருந்தால் இரு மடங்கு சக்தி வந்துவிடும்.இத‌னால் என‌க்கு எல்லோரும் ந‌ண்ப‌ர்க‌ள் ஆனார்க‌ள்.ஆனால் நெருக்கமாக ஒருவர் கூட‌ இல்லை என்ற‌ நிலை உருவான‌து.அவ‌னைத்த‌விர‌.

என்னிட‌ம் பேசிக்கொண்டிருந்தால் 10 நிமிட‌ங்க‌ள் பொழுது போகும் என்ற‌ நிலைமையில் தான் என்னிட‌ம் எல்லோரும் ப‌ழ‌கினார்க‌ள்.

இது குறித்து நான் அவனிடம் வருத்தப்படும் போதெல்லாம், "இதற்கெல்லாம் காரணம் நீயே தான்...ஒருவர் நம்மைப் பற்றி தப்பு சொன்னால் அவரைக் குறை சொல்லலாம்..ஆனால் எல்லோரும் நம்மைப் பற்றிக் குறை சொன்னால் நாம் தான் சுயபரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்"என்று சொல்வான்.

அப்புறம் என்னைப்பற்றி சுயபரிசோதனை செய்து பார்த்ததில் என் தவறுகள் புரிய ஆரம்பித்தது.ஆனால் என்ன கல்லூரிப் பருவம் முடிந்துவிட்டது.

அங்கதம் குறித்து என் அனுபவத்தில் அறிந்து கொண்டவை:

1)நாம் ஒருவரைக் கிண்டல் செய்யத் துவங்கும் போது அவர்களை விட நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

2)நம்முடைய கிண்டலுக்கு அடுத்தவர்கள் சிரிக்கும் போது நம் கண்கள் மேலே செருக ஆரம்பிக்கும்.உலகத்திலேயே நமக்கு கீழ் தான் எல்லோரும் என்ற நினைப்பு உருவாகும்.

3)உண்மை புரியும் போது நம் கூட நெருக்கமாக யாரும் இருக்க மாட்டார்கள்.

4)ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.

இன்று ஜெயமோஹனும் அங்கதம் என்ற பெயரில் நான் செய்ததைத்தான் செய்துவருகிறார்.எனக்காவது என் தவறுகளை சுட்டிக்காட்ட அவன் இருந்தான்.ஆனால் அவருக்கு....அவருக்குத்தான் தெரியும்.

ஆக நான் ஒன்றும் ஜெயமோஹன் அளவிற்கு உயர்ந்துவிடவில்லை.அவர் தான் என் அளவிற்கு தாழ்ந்துள்ளார்.

கடைசியாக ஜெயமோஹனிடம் ஒரு கேள்வி

எழுத்துலக டைனசோரான நீங்கள் வசனம் எழுதித் தள்ளிய,தமிழ்நாட்டிலேயே 1000 நாட்கள் ஓடி சாதனை செய்த "கஸ்தூரிமான்"என்ற திரைக்காவியத்தை விட பழைய படங்கள் எதில் குறைந்து விட்டது?
(இதுவும் அங்க‌த‌ம் தான்)

11 comments:

Anonymous said...

இந்த விவகாரத்திலேயே எனக்குப் பிடித்த ஒரே இடுகை இதுதான்....

//ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.//

புல்ஸ் ஐ :-)

prakash

வவ்வால் said...

//"கஸ்தூரிமான்"என்ற திரைக்காவியத்தை விட பழைய படங்கள் எதில் குறைந்து விட்டது?
(இதுவும் அங்க‌த‌ம் தான்)//

நல்லக்கேள்வி பதில் வருமா? வராது!

அந்த பழைய படம் தயாரித்தவர்கள் எல்லாம் ஜெயமோகனுக்கு காசு தரலையே, மான் படக்காரர் தானே காசு தந்தார், அப்போ இது நல்ல படம் தான் :-))

முதலில் இவர் ஒருங்க உருப்படியா எழுதட்டும், காபி அடிச்சு எழுதிப்புட்டே இம்மாம் பேசுறார் :-))

செல்வம் said...

வாங்க பிரகாஷ்...நன்றி

செல்வம் said...

வாங்க வவ்வால்...

//மான் படக்காரர் தானே காசு தந்தார், அப்போ இது நல்ல படம் தான்//

இந்த‌ப்ப‌ட‌த்திற்கு என் ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்து சென்று...நான் அடி வாங்காத‌ குறைதான்.அது தான் நினைவுக்கு வ‌ந்த‌து.

வ‌ருகைக்கும்,க‌ருத்திற்கும் ந‌ன்றி.

அகஆராய்ச்சியாளன் said...

செல்வம்,இந்தக் கட்டுரை என்னுடைய அகவாராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.மிக்க நன்றி.

செல்வம் said...

வாங்க‌...அகஆராய்ச்சியாளன்
ரொம்ப நன்றி...

PRABHU RAJADURAI said...

"ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது"

அருமையான ஒப்பீடு! இந்த வித்தியாசத்தை இப்பொழுதுதன் உணர்கிறேன்!

Anonymous said...

Hi,

i would like to draw your attention to the following points.

1-Jeyamohan is not a director of 'Kasturi Mann'.

2-I think he never said 'Kasturi Mann' is at par with World Classics.

3-He wrote the dialogues for the film. so he deserved the money.

how many tamil writers say writing is my one and only profession?

If u really think MGR and Sivaji are legends of Tamil Cinema, this satire never hurt their personality. All u lack is the mindset to enjoy.

Joseph Mani

செல்வம் said...

வாங்க ஜோசப்மணி...

அவர் திரைக்கதை எழுதும் வித்தையை சமீபத்தில் கற்றிருப்பதாகவும்,அதன்படி பார்த்தால் பழைய படங்களைப் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்கமுடிவதில்லை என்றும் கூறியிருந்தார்.அதற்காக கேட்கப்பட்ட கேள்வி தான் அது.

// If u really think MGR and Sivaji are legends of Tamil Cinema, this satire never hurt their personality. All u lack is the mindset to enjoy. //

இதையே நீங்க‌ள் ஜெய‌மோஹ‌ன் விச‌ய‌த்திலும் எடுத்துக் கொள்ள‌லாமே!!!

ஜமாலன் said...

//1)நாம் ஒருவரைக் கிண்டல் செய்யத் துவங்கும் போது அவர்களை விட நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

2)நம்முடைய கிண்டலுக்கு அடுத்தவர்கள் சிரிக்கும் போது நம் கண்கள் மேலே செருக ஆரம்பிக்கும்.உலகத்திலேயே நமக்கு கீழ் தான் எல்லோரும் என்ற நினைப்பு உருவாகும்.

3)உண்மை புரியும் போது நம் கூட நெருக்கமாக யாரும் இருக்க மாட்டார்கள்.

4)ஊரையே கிண்டல் செய்யும் விவேக் வகை நகைச்சுவைகளை விட தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் வடிவேல் வகை நகைச்சுவைதான் சிறந்தது.

இன்று ஜெயமோஹனும் அங்கதம் என்ற பெயரில் நான் செய்ததைத்தான் செய்துவருகிறார்.//

excellant. பொதுவாக கிண்டலின் உளவியல் அம்சங்களை நுடப்மாக விளக்கியுள்ளீர்கள்.

செல்வம் said...

வாங்க ஜமாலன்....வருகைக்கு மிக்க நன்றி