Saturday, February 2, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்

ஒரு சேஞ்சுக்கு படத்தின் நாயகன் நா.அழகப்பனே வந்து படத்தை விமர்சிக்கிறார்.ஓவர் டூ நா.அழகப்பன்.

வணக்கங்க.நாந்தான் நாவன்னா.அழகப்பன்.உங்க படத்த நீங்களே விமர்சனம் பண்ணுங்கன்னு நம்ம செல்வம் தம்பி கூப்டுச்சு.சரி தான் கழுதய பண்ணிட்டு போவோமுன்னு வந்தேன்.

படத்துல நான் ஒரு நாடக ட்ரூப் வச்சிருக்கேன்.(தியாகு,மனோபாலா தவிர மத்ததெல்லாம் நம்ம பசங்க தான்).ஓப்பனிங் சாங்க முடிச்சிட்டு வந்து பாத்தா எங்கம்மா என் சாதகத்த பாத்துட்டு பயந்து போய் கிடக்காங்க.அதுக்கு பரிகாரமா அங்கன தீடீரென முளச்ச ரம்பயோட சிலைக்கு மால போடுறேன்.

உடனே ஏற்கனவே என் நகைச்சுவையில மயங்குன (டி.வி ல வின்னர்,மருதமலை,புலிகேசி, படத்து ஜோக்ஸெல்லாம் பாத்துருக்கும் போல இருக்கு.ஏன்னா இந்தப்படத்துல நான் ஒன்னும் பெரிசா செய்யலியே) ரம்பை என்னை ஆள் வச்சு இந்திரலோகத்துக்கு தூக்கிட்டுப் போய்டுது.இருங்க..இருங்க முழுக்கதையும் சொல்றேன்.அதுக்குள்ள ஓடுனா எப்படி?

காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.

நடுவுல நாரதரா நாசர் அப்பப்போ வந்து போறாரு.எங்க பக்கத்து வீட்டு குழந்தை தீடீரினு செத்துப்போக,எனக்கு இந்த எமப் பய மேல வந்தது பாருங்க கோவம்...இன்டர்வெல்.

அதுக்கு அப்புறம் கதய எப்படி கொண்டு போறதுன்னு தெரியல.கழுதய கொண்டு போய்த்தான ஆகனும்னு, பூலோகத்துல காச்சுன சாராயத்த மேலோகத்துக்கு எடுத்துட்டு போய் கிங்கரப்பசங்களுக்கும்,சித்ரகுப்தனுக்கும் ஊத்திக் கொடுத்து இந்த எமப் பயல கொல்லலாம்னு பாத்தா,அந்தப் பயலுக்கு சாவே கிடையாதாம்.அந்த நன்னாரிக்கு பொறந்த நாதாறி எல்லாம் கனவுன்னு நம்பி எங்கள ஏதும் செய்யாம விட்டுடுச்சு.

சரி மக்களோட விதிய மேலோகத்துல இருந்து படிச்சிட்டு போய் பூலோகத்துல அதையெல்லாம் சொல்லி,நரகத்துல கொடுக்கிற தண்டனையையும் சொல்லி அவங்களோட பாவங்கள குறைக்கிறேன்.இதனால‌ முல்லைப் பெரியாறு பிரச்சினை வரைக்கும் தீந்துருதுன்னா பாருங்களேன்.படத்துலயே இதான் பெரிய காமெடின்னு சில நன்னாரிக சொல்லிக்கிட்டு திரியுதுங்க.இருக்கட்டும்...இருக்கட்டும்...

எமப்பயலோட வரவுல ஆட்கள் குறைய டென்சனாகிறாரு எமன்.நாரதர் வந்து என்னைப் போட்டுக் கொடுக்க கடுப்பான இந்திரனும்,எமனும் எனக்கும்,ரம்பைக்கும் சாபம் கொடுக்கிறாங்க.

கொடுமை,கொடுமைன்னு இவ்வளவு நேரம் படம் பாத்தா கிளைமேக்ஸ்ல ஒரு கொடுமை திங்கு,திங்குன்னு ஆடுச்சாங்குற கதையா நான் 90 வயசுக் கிழவனா மாறிடுறேன்.அப்புறம் என்ன ஆச்சு.கத முடிஞ்சது.உங்க கத இல்லீங்க.எங்க படத்தோட கதை.

முதல்ல படத்துல இருக்கிற நல்ல விசயங்கள பாப்போம்.முதல்ல ஞாபகம் வர்றது நம்ம தோட்டா தரணி அண்ணண் தான்.என்ன அருமையா,பிரம்மாண்டமா செட் போட்டுருக்காரு.உங்களுக்கு ஒரு தொப்பிதூக்கல்ணே(ஹேட்ஸாப்).

அப்புறம் இந்த எமப்பயலா வற்றானே.அவன் நல்லா நடிச்சிருக்கான்ப்பு.சும்மா சொல்லக்கூடாது.டயலாக் டெலிவரியும்,பாடி மாடுலேசனும் பய பின்னியிருக்கான்.அதுவும் நீங்க நல்லவரா?கெட்டவரா?ன்னு ஒருத்தன் கேட்குற சீன்ல பிச்சு உதறியிருக்கான்.

நம்ம ஒளிப்பதிவாளர் கோபிநாத்.நல்லா கலர்புல்லா படம்புடிச்சிருக்காரு அண்ணே.

அம்புட்டுதேன். இப்ப மத்த விசயங்கள பாப்போமா...(ஆஹா கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க)

படத்துல கதையும்,திரைக்கதையும் கொஞ்சம் அப்படி,இப்படி இருக்கிறதால நம்ம ஹீரோயினையும் கொஞ்சம் அப்படி,இப்படி காட்டியிருக்கோம்.ஒரு வார்த்தைல சொல்லனும்னா பில்லா நயந்தாராவுக்கு மேலா.என்ன‌ வ‌டிவேலு ப‌ட‌த்துல‌யா இப்ப‌டினு கேட்க‌க்கூடாது.வேற‌ வ‌ழியில்ல‌.

அப்புறம் படத்துல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற மாறியெல்லாம் சீன் இல்ல.ஏதோ அங்கொன்னும்,இங்கொன்னுமா எங்கள அறியாம வந்தது தான் இருக்கு.அதனால ஓவரா எதிர்பார்த்து படத்துக்கு வராதீங்க சொல்லிப்புட்டேன்.

வசனங்கள்.நம்ம தம்பிராமையா நல்லா தமிழ்ல வசனம் எழுதுறாப்ல.ஒத்துகிடுதோம்.அதுக்காக இப்படியா தீடீர் திடீர்னு...முடியல‌...

படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.

எங்கண்ணண் கவுண்டமணி எமனாகவும்,செந்திலு சித்ரகுப்தனாகவும் நடிச்ச லக்கிமேன் அளவுக்கு கூட படம் இல்லைன்னு பாத்தவங்க சொல்றாங்க.வெயிட் பண்ணி பாப்போம்
எப்ப‌டி ஓடுதுன்னு.

மொத்ததுல தமிழ்மண வாசகர்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்னா ஒரு நல்ல உபத்திரவம் இல்லாத,எந்த வம்பதும்புக்கும் போகாத,மொக்கை.

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.நாங்க எப்படி படம் எடுத்தாலும் வந்து பாக்குறீங்க...நீங்க ரொம்ப நல்லவங்க...(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சரி வர்ட்டா...அடுத்து ஒரு நல்ல படத்துல சந்திப்போம்(எடுத்தா...)

நீதி:
வருடத்திற்கு சுமார் 100 தமிழ்ப்படங்கள் வெளிவரும்.அதில் 10 தான் நல்ல படங்களாக இருக்கும்.இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்.

17 comments:

Anonymous said...

//காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.//

ஏப்பு! இந்திரனும், எமனும் நைட்ல வேல பாக்க அங்கன என்ன கால் சென்டரா நடத்துராங்ய? அப்புறம் ரெண்டு பேரும் பகல்ல என்ன பண்ணுவாங்க?

Sridhar V said...

//படத்துல நானும்,அந்த எமப்பயலும்,நாரதரும் நல்லா நடிச்சிட்டதால மத்தவங்கெல்லாம் ஒப்புக்கு சப்பாணிதான்.
//

அப்ப இந்திரன்?

காத்திருப்போம். காத்திருப்போம். வேற என்னாத்த பண்ண? :-(

சேது said...

நீங்க சொல்லிருக்கறது ரொம்ப சரி. படம் ரொம்பவே கொடுமையா இருக்கு. இம்சை அரசன் எதிர்ப்பார்ப்புல படத்துக்கு போனோம்.... முடியல... நாங்க ஒரு 10 பேர் படம் பாக்க போனோம், படம் ஆரம்பிச்ச 30-40 நிமிஷத்துல ஒருத்தன் சொன்னான், "நாமலே இதவிட நல்லா காமடி பன்னுவோமே... ஏன் இவனுங்க இவ்வளோ மொக்கை போடராங்க? எங்களால முடியல" னு சொல்லிட்டு ஓடிட்டாங்க. இவ்வளவு சீக்கரம் முடிவுக்கு வர கூடாதுனு படத்த கண்டின்யூ பண்ணேன். ரொம்ப கஷ்டப்பட்டு, சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இண்டர்வல் வரைக்கும் தாக்கு புடிச்சோம். அதுக்கப்பறம் என்னாலயும் முடியல. பாதிலயே நாங்க 4 பேர் கெளம்பிட்டோம். மனோதிடம் படைச்ச சிலர் மட்டும் தான் கடைசி வரைக்கும் தாக்குப் பிடிக்க முடிஞ்சது. ஓவர் மொக்கை... இத பாக்கறப்போ சென்னை தொலைக்காட்சில வர செவ்வாய்க்கிழமை நாடகம் தான் ஞாபகம் வருது எனக்கு.

அனுசுயா said...

////காலையில பூலோகத்துலயும்,நைட்டு மேலோகத்துலயும் இருக்கிற மாதிரி செட்டப்.அப்போ எப்ப தூங்குவ?னெல்லாம் கேட்கக் கூடாது.அழுதுடுவேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மேலோகத்துல இந்திரன் கடலை போடுறதையும், எமன் பாவம் செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்குறதையும் மாறி மாறி ஏதோ தீவுத்திடல்ல பொருட்காட்சி பாக்கிற மாதிரி பாக்குறேன்.//

ஏப்பு! இந்திரனும், எமனும் நைட்ல வேல பாக்க அங்கன என்ன கால் சென்டரா நடத்துராங்ய? அப்புறம் ரெண்டு பேரும் பகல்ல என்ன பண்ணுவாங்க?//

உங்க விமர்சனம் சூப்பர். அதவிட கமெண்ட் சூப்பரோ சூப்பர் ரிப்பீட்டு :)

வசந்தம் ரவி said...

உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு செல்வம்.

Sanjai Gandhi said...

ஹிஹி.. வடிவேலு நல்லா விமர்சனம் பண்ணி இருக்கார். நானும் விமர்சனம் எழுதி இருக்கென். நேரம் கெடைச்சா வந்து படிங்க. நான் ஆள்(வடிவேல்) வச்சி எல்லாம் எழுதலைங்க.. நானே தான் எழுதி இருக்கேன். :P

செல்வம் said...

வாங்க அனானி.எப்படித்தான் யோசிப்பீங்களோ?????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செல்வம் said...

வாங்க sridhar. இந்திரன் புலிகேசியை ஞாபகப் படுத்துகிறார்.கடலை போடுகிறார்.வேறு ஒன்றும் சிறப்பாக இல்லை

செல்வம் said...

வாங்க சேது..

//ஓவர் மொக்கை... இத பாக்கறப்போ சென்னை தொலைக்காட்சில வர செவ்வாய்க்கிழமை நாடகம் தான் ஞாபகம் வருது எனக்கு//

நான் பாத்த‌து இல்லை.ரொம்ப‌ மொக்கையா இருக்குமோ?

செல்வம் said...

வாங்க அனுசுயா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

செல்வம் said...

வாங்க ரவி.ரொம்ப நன்றி.

செல்வம் said...

sanjai

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.உங்கள் விமர்சனம் படிச்சாச்சு.அருமையாக உள்ளது.

Anonymous said...

//வாங்க அனானி.எப்படித்தான் யோசிப்பீங்களோ?????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

எல்லாம் உங்க விமர்சனத்த படிச்சப்போ வந்த flow-தான். மிக்க நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

புலிகேசியே மொக்கை! (இப்ப பாத்து பாருங்க!) அதோட ஹேங் ஓவர்லே இன்னொரு படமா?

வடிவேலு முழுநீள காமெடி ஸ்கிரிப்ட் கிடைச்சாதான் ஹீரோவா நடிக்கணும். எல்லா ரோல்லேயும் தானே நடிக்கணும்னு ஆசைப்படக்கூடாது..

//இன்னும் 11 மாசங்கள் இருக்கிறது.காத்திருப்போம்// படம் பாக்காம காத்திருப்போமே - உடல்நல்த்துக்கு நல்லது :-)

நல்லா எழுதி இருக்கீங்க!

செல்வம் said...

வாங்க சுரேஷ்...புலிகேசி படத்துல சொல்லிக்கிற மாதிரியாவது சீன்கள் இருக்கும்...
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுரேஷ்

சந்திரசேகர் said...

// வடிவேலு முழுநீள காமெடி ஸ்கிரிப்ட் கிடைச்சாதான் ஹீரோவா நடிக்கணும். எல்லா ரோல்லேயும் தானே நடிக்கணும்னு ஆசைப்படக்கூடாது.. //

ரொம்ப சரியா சொன்னீங்க ! அதுவும் புராண, சரித்திர படங்களில் நடிக்கவே கூடாது !

வடிவேலு...வடிவேலு மாதிரியே இருந்தால்தான் எவ்வ்வ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்க முடியும் !

செல்வம் said...

//வடிவேலு...வடிவேலு மாதிரியே இருந்தால்தான் எவ்வ்வ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்க முடியும் !//

வாங்க சந்திரசேகர்...

கரிக்கிட்டா சொன்னீங்க.இந்த படத்துல நகைச்சுவையைத்தவிர மற்ற எல்லா விசயங்கள்ளையும் concentratஎ பண்ணுண‌துதான் பிரச்சினையே...