உதாரணமாகப் புதிதாக படிப்பதற்கு ஆசைப் படும் ஒரு பையனிடம் சென்று பின்நவீனம், கட்டுடைத்தல், நான்-லீனியர்,குறியீடு, படிமம் என்று கொடுத்தால் அவன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சத்யம் தியேட்டருக்கு morning-show பார்க்கச் சென்று விடுவான்.அவன் ராஜேஸ்குமாரில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.பலரும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.
என்ன சிலர் சூழ்நிலை காரணமாகவோ, தீவிரமின்மை காரணமாகவோ, அந்த படிகளிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.
அவருடைய படைப்புகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கவே இயலாது என்பது என் கருத்து.
1)சிறுகதைகள் - குதிரை யில் காணப்படும் அங்கதம், மாஞ்சு வில் காண்ப்படும் Narration, சில வித்தியாசங்களில் காணப்படும் முடிவு
2)நாவல்கள் - பூக்குட்டி, அன்று உன் அருகில், என் இனிய இயந்திரா போன்றவை.
3)கட்டுரைகள் - 70 வயது நிறைவுக் கட்டுரை, வயது வந்தவர்களுக்கு மட்டும், ஆப்பிரேசன் கட்டுரை, அனுபவக் கட்டுரைகள்(குறிப்பாக அவர் பாட்டி,அப்பா,மனைவி பற்றி எழுதியவை)
4)இது போக அவர் நல்ல இலக்கியங்களையும் அறிமுகப் படுத்த தவறியதே இல்லை.நா.முத்துக்குமார், மகுடேஸ்வரன்,மனுஷ்யபுத்திரன் போன்றோரெல்லாம் அவரால் பிரபலப்படுத்தப்பட்டவர்கள் தான்.
5)விஞ்ஞான வரிசையில் "ஏன் எதற்கு எப்படி", "கடவுள் இருக்கிறாரா", "வீட்டுக்குள்ளே ஒரு உலகம்" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதைஎல்லாம் விட ஸீரீரங்கத்து தேவதைகள் (பகுதி 1) அவருடைய படைப்பின் உச்சம் என்று கூட சொல்லலாம்.
மற்றோர் பிடித்த அம்சம் அவர் விமர்சனங்கள் காரணமாக எழுத்துத் துறையை விட்டு விலகியது இல்லை.
எதை எழுதினாலும் அதை சுவாரஸ்யமாக எழுதும் திறமை அவருக்கு வாய்த்து உள்ளது.சுஜாதா இல்லாத அந்த வெற்று இடத்தில் வேறு யாரை Replace செய்ய முடியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
அவர் நினைவுகளோடு.....
1 comment:
சரியாகச் சொன்னீர்கள் .அவரது ஆன்மா சாந்தியடைவதாக
Post a Comment