Sunday, February 17, 2008

ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?

"பூஜா - சிங்களத்துக்காரி

ஆரியா - மலையாளத்தான். ஜம்ஷத்துண்ணு பேரு

கோணங்கி - தேவமாரு."


மேலே கூறிய அறிய தகவல்கள் அனைத்தும் நம் எழுத்துலக டைனசோரான திரு.ஜெயமோஹன் அவர்களின் (அதிகமில்லை ஜென்டில்மேன்...)2 பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்ட தகவல்கள்.

இர‌ண்டு ப‌திவுக‌ளில் இருந்து 3 பேர்க‌ளின் சமூக‌த்தை அறிய‌ முடிகிற‌து என்றால்,அவ‌ருடைய‌ ல‌ட்ச‌க்க‌ணக்கான‌ க‌ட்டுரைக‌ளைப் ப‌டித்தால் 10 கோடி த‌மிழ‌ர்க‌ளின் ச‌மூக‌த்தையும் அறிந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன்.

"சாதி இரண்டொழிய வேறில்லை"...."யாவருங் கேளீர்"...என்றெல்லாம் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் மொழியை 1 இஞ்ச் மேலே உயர்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை,எட்டிக் கீழே தள்ளாமல் இருந்தால் போதும்.

தெரிந்தோ,தெரியாமலோ நீங்கள் இந்த சமுதாயத்தின் icon ஆக உள்ளீர்கள்.உங்களைப் படித்து உங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தாலும் இருப்பார்கள்.அவர்களுக்காகவாது நீங்கள் எழுதுகின்ற‌ விஷயங்களை நீங்களே ஒருமுறை படித்து விட்டு அச்சு/வலையில் ஏற்றுங்கள்.

4 comments:

Anonymous said...

///தமிழ்நாட்டுக் கருத்தியல் விவாதங்கள் தன் தரப்பை எளிமைப்படுத்துவதில் தொடங்கி மாற்றுத்தரப்பை அதற்கேற்ப மேலும் எளிமைப்படுத்துவதில் முடிகின்றன. இந்த மனநிலைக்கு ‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற வரியே போதுமானதும் வசதியா னதுமாகும். ஆகவே கடந்த அரை நூற்றாண்டாக இவ்வரி மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு மார்க்ஸ் வந்தாலும் மறுக்க முடியாத ஒரு நிலையை அடைந்து விட்டது இங்கு. இந்த ஒரு வரியின் கொச்சையான விரிவாக்கமே பெரியாரியம் என்ற பெயரில் ஒரு தனிக்கோட்பாடாக இங்கு முன் வைக்கப்படுகிறது.///

காண்க திண்ணை

பெரியாரியத்தை இவ்வளவு கொச்சையாகப் புரிந்துகொண்டுள்ளவரிடம் வேறு எதை எதிர்பார்ப்பது?

சரவணன்

செல்வம் said...

வாங்க சரவணண்....இவர்கள் பெரியாரியத்தை எப்படி போட்டுக் கிழித்தாலும் நம் தமிழ் சமுதாயத்தின் reformer பெரியார் என்பது மறுக்க முடியாது.

Anonymous said...

//வாங்க சரவணண்....இவர்கள் பெரியாரியத்தை எப்படி போட்டுக் கிழித்தாலும் நம் தமிழ் சமுதாயத்தின் reformer பெரியார் என்பது மறுக்க முடியாது.//

இதை அவருமே மறுக்கவில்லையே!!

முழுசா படிக்கவும்

செல்வம் said...

வாங்க அனானி...
பெரியார் ஒரு reformer என்ற அர்த்தத்துல தான் அவர் கட்டுரை எழுதினார் என்கிறீர்களா?

//முழுசா படிக்கவும்//

Same to you :-))