Friday, February 29, 2008

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினால் கெட்டுவிடுவோமா?என்ன கொடுமை சார் இது...

சுஜாதாவின் நினைவாக சுஜாதா...என்ற இடுகையை இட்டிருந்தேன்.அதில் சுஜாதாரசிகன் என்ற பெயரில் ஒரு நண்பர் வந்து "மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கினை முழுவதும் சொல்லி, இது தான் இலக்கியமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அவ‌ருக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்றுதான்.

தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா!!

சுஜாதா மட்டும் அந்த‌ மாதிரி எழுதியிருக்காவிட்டால் நான் ந‌ல்ல‌ பைய‌னாக‌ இருந்திருப்பேன் என்ப‌து வ‌டிவேலு காமெடியை விட‌ சிற‌ந்த‌து.

அவர் எழுதியிருந்தாலும்,எழுதியிராவிட்டாலும் நாம் இப்ப‌டியேதான் இருந்திருப்போம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.

சுஜாதா என்ற‌ வார்த்தையைக் கூட‌ கேள்விப் ப‌டாத‌ ந‌ம் கிராம‌த்து ம‌க்க‌ளின் பாலிய‌ல் க‌தைக‌ளை கி.ரா அவ‌ர்க‌ள் தொகுத்து த‌ந்திருக்கிறார்.(நாட்டுப்புற‌ பாலிய‌ல் க‌தைக‌ள்).ப‌டித்துப் பாருங்க‌ள்.

நாம் வாழ்க்கை முழுவ‌தும் ந‌ல்லவ‌ராக‌ இருப்ப‌த‌ற்கு ஒரே ஒரு வ‌ழிதான் உள்ள‌து.பிற‌ந்த‌வுட‌னே ஒரு அறைக்குள் சென்று க‌த‌வை மூடிக் கொண்டு இற‌ந்த‌ பிற‌கு தான் வ‌ர‌வேண்டும்.

ந‌ம் வாழ்க்கையில் ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளும் கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளும் ச‌ரி பாதி க‌ல‌ந்து தான் இருக்கும்.தேர்வு ந‌ம் கையில் தான் உள்ள‌து.

மெக்ஸிகோ ச‌ல‌வைக்காரியையும் தாண்டி, பிராம‌ண ஆத‌ர‌வையும் தாண்டி,எழுத்து வியாபார‌த்தையும் தாண்டி அவ‌ருடைய‌ எழுத்து ந‌ம் அனைவ‌ரையும் பாதித்து உள்ள‌து என்ப‌தே உண்மை.

குறிப்பு:

இந்த‌ இடுகைக்கு "தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா"என்ற‌ பெய‌ர் தான் வைக்க‌லாம் என்று இருந்தேன்.எதுக்கு வ‌ம்பு?யாரும் வ‌ந்து ப‌டிக்க‌மாட்டார்க‌ள் என்று தான் பெய‌ர் மாற்றி வைத்தேன்.
(இதே விச‌ய‌த்தைத் தான் அவ‌ரும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பின்ப‌ற்றினார்.:-))

11 comments:

வசந்தம் ரவி said...

super

செல்வம் said...

வாங்க ரவி...நன்றி

Anonymous said...

Good one!

ILA (a) இளா said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.. இந்தப் பதிவு தீதா, நல்லதான்னு யாரு முடிவு பண்ணுவாங்க சொல்லுங்க?

செல்வம் said...

வாங்க இளா...வருகைக்கு ரொம்ப நன்றி

Anonymous said...

நீங்கள் சொல்வது சரி
யாரோ ஒருவரை வம்புக்கு கூப்பிதுவது போல் தெரிகிறது.
அன்புடன் மகி

Anonymous said...

ஏங்க சைக்கோ மூர்த்தியின் பின்னோட்டங்களுக்கு மதிப்பு அளித்து ஒரு பதிவு போடறீங்க?

குமரன் (Kumaran) said...

//குறிப்பு:

இந்த‌ இடுகைக்கு "தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா"என்ற‌ பெய‌ர் தான் வைக்க‌லாம் என்று இருந்தேன்.எதுக்கு வ‌ம்பு?யாரும் வ‌ந்து ப‌டிக்க‌மாட்டார்க‌ள் என்று தான் பெய‌ர் மாற்றி வைத்தேன்.
(இதே விச‌ய‌த்தைத் தான் அவ‌ரும் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பின்ப‌ற்றினார்.:-))
//

CorrectE!!!

செல்வம் said...

வாங்க மகி...சின்னப்பையன் நானு.ஏதோ தோணுணத சொன்னேன்.

செல்வம் said...

அனானி போற போக்குல ஒரு காட்டு காட்டிட்டு போறீங்களே...யார் என்று சரியாகத் தெரியாத நிலையில் எதற்கு அவர் பெயரை இதில் இழுக்கிறீர்கள்?

செல்வம் said...

வாங்க குமரன்...நன்றி